இறந்த மகனுக்கு கடந்த 05 நாட்களாக தாய் உணவூட்டி வந்த சம்பவம் நுகேகொடவில் நடந்து உள்ளது.
தாய்க்கு 60 வயது. மகனுக்கு 27 வயது. இருவரும் உள நல குறைபாடு உடையவர்கள். இவர்கள் மாத்திரம் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
நித்திரைக்கு சென்ற மகன் படுக்கையிலேயே ஐந்து நாட்களுக்கு முன் இறந்து போனார். ஆனால் மகன் மீது வைத்திருந்த அன்பு காரணமாகவும், உள நல பாதிப்பு காரணமாகவும் இது தெரியாமல் தாய் படுக்கையில் வைத்து உணவூட்டி இருக்கின்றார்.
அயலவர்களுக்கு பிண நாற்றம் எடுத்து இருக்கின்றது. இவரது வீட்டுக்கு வந்து விசாரித்தார்கள். விசாரித்தபோது விபரத்தை அறிந்து கொண்டனர்.
மிரிஹான பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிஸாரினால் சடலம் கொழும்பு தெற்கு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !