பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்துவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு தன் அருகே இருந்த கையெறி குண்டை எடுத்து வீச எத்தனித்தாராம் பின்லேடன். ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் அமெரிக்கப் படையினர் பின்லேடனை வீழ்த்தி விட்டனராம்.
அல்கொய்தாவை நிறுவிய பின்லேனின் மரணம் இன்னும் கூட விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. அவர் கொல்லப்பட்டு இத்தனை மாதத்திற்குப் பிறகும் கூட அவரது கடைசி நிமிடங்கள் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அச்சம் என்பது மடமையடா:
அமெரிக்கப் படையினர் தன் வீட்டுக்குள் புகுந்து தன்னை சுற்றி வளைத்தைதப் பார்த்தும் கூட பின்லேடனுக்கு அச்சம் வரவில்லையம்.
கடைசி நேர தாக்குதலுக்கு எத்தனித்த பின்லேடன்:
கை நிறைய துப்பாக்கிகளுடன் அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்ததைப் பார்த்த பின்லேன் அருகில் இருந்த ஒரு அலாமரியில் வைத்திருந்த கையெறி குண்டை எடுத்து வீச எத்தனித்தார். ஆனால் அதற்குள் குண்டுகளைப் பாய்ச்சி பின்லேன் கதையை முடித்து விட்டனர் அமெரிக்க சீல் படையினர்.
பாகிஸ்தான் விசாரணை அறிக்கை:
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் விசாரணைக் கமிஷன் ஒரு அறிக்கையை அந்த நாட்டு அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் இது கூறப்பட்டுள்ளது.
பின்லேடன் தலையில் சுட்ட வீரர்:
பின்லேடனின் தலையில்தான் முதலில் ஒரு வீரர் சுட்டுள்ளார். வெகு அருகில் இருந்து இந்த துப்பாக்கிச் சூட்டை அந்த வீரர் நடத்தினார். குண்டு தலையில் பாய்ந்ததும் அப்படியே வீழ்ந்து விட்டாராம் பின்லேடன்.
ஏ.கே.47 துப்பாக்கியுடன் இருந்தார்:
லேடன் பின்லேடன் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது ஏ.கே.47 துப்பாக்கியை அவர் கையில் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அமெரிக்கப் படையினரின் தாக்குதல் அதிவேகமாக இருந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !