Headlines News :
Home » » பள்ளிச் சிறுமி வல்லுறவு வழக்கில் குற்றவாளி கார் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

பள்ளிச் சிறுமி வல்லுறவு வழக்கில் குற்றவாளி கார் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

Written By TamilDiscovery on Tuesday, July 9, 2013 | 10:37 AM

மும்பையில் பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த கார் டிரைவருக்கு 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில், வாஷி என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, 2007 பிப்., மாதம் 14ம் தேதி, காலை பள்ளிக்கு கிளம்பினார். அப்போது அங்கு காரில் வந்த அவரது மாமா, தன் டிரைவர் சிவாஜி மோதிராமிடம், சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு வரும் படி கூறியுள்ளார். ஆனால், சிவாஜி மோதிராம், சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள தன் நண்பனின் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி, சில நாட்கள் கழித்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறியுள்ளார். இதன் பின், சிறுமியின் தாயார், வாஷி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, டிரைவர் சிவாஜி மோதிராமை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில், தானே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வாக்வாஸ் தீர்ப்பு வழங்கினார். இதில், சிவாஜி மோதிராமின் குற்றம் நிரூபணமானது. அவருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும், மூன்று மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template