அச்சுவேலி மக்கள் வங்கியில், வங்கியின் பின் பக்க ஜன்னல் கிறீலைக் கழற்றி உட்புகுந்த திருடன் மின்சார அலாரம் ஒலி எழுப்பியதையடுத்து தனது முயற்சியை கைவிட்டு ஓடித்தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
திருட முயற்சித்தவரின் அனைத்து முயற்சிகளும் அவரின் உருவமும் வங்கிக்கு உள்ளே இணைப்புச் செய்யப்பட்டிருந்த இலத்திரன் கெமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் சம்பந்தப்பட்டவரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் திருடன் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
நேற்றுக்காலையில் வங்கி ஊழியர்கள் வங்கியை திறந்து தமது வழமையான கருமங்களை தொடர முயன்ற வேளையில் யன்னல் கிறீல் அகற்றப்பட்டிருப்பதை அவதானித்ததை அடுத்து வங்கியின் வழமையான செயற்பாடுகளை இடைநிறுத்தியதோடு மேற்படி விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அச்சுவேலி பொலிஸாரும் மக்கள் வங்கி பாதுகாப்பு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !