உ.பி.யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் பெண், கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்காமல் இருக்க நாக்கை துண்டித்த கொடூர செயல்நடந்துள்ளது.
உபி. மாநிலம் பிரதாப்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 3 பேர் கொண்ட மர்ம கும்பலால்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரதாப்கார்க் போலீசில் தந்தை புகார் கொடுத்தார். ஆனாலும் உரிய நடவடிக்கை இல்லை. பின்னர் 6 மாதங்கள் ஆன நிலையி்ல் சிலகுற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி . தற்போது சிறையில் உள்ளான்.
திடீரென மருத்துவமனையி்ல்:-
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகஇருவர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு வரும் 24-ம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் சாட்சி சொல்லி வாக்குமூலம் அளிக்க இருந்தார். இந்நிலையில் நேற்று பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் திடீரென மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மைனர் பெண்ணின் தந்தை போலீசில் கொடுத்த புகாரில், சில மர்ம நபர்கள், வழக்கை வாபஸ் பெற வேணடும் என மிரட்டினர். கோர்ட்டில் சாட்சி சொல்ல விடாமல் எனது மகளின் நாக்கை துண்டித்து விட்டு சென்றனர். தற்போது அவள் பேசும் திறனை இழந்துவிட்டார் என கூறியுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மைனர் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உ.பி.யில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு நிலைமைபடு மோசமாக இருப்பதாக மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம்உ.பியை உறைய வைத்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !