அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண தேர்தல் அமைப்பாளர் ஒருவர் அங்கிருந்த நபர் ஒருவரது மூக்கை கடித்து தாக்கியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண தேர்தல் அமைப்பாளர் துஷார ஹேமச்சந்திரவின் தாக்குதலில் காயமடைந்தவர் ஒரு ஊடக நிறுவன ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4 தொடக்கம் 4.35 மணிக்கிடையில் இச் சம்பவம் குறித்து பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த வர்த்தகர் ஒருவரின் மூக்கை கடித்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !