தற்போது நிறைய மக்கள் கொலஸ்ட்ரால் (கொழுப்பு) பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் இத்தகைய கொலஸ்ட்ராலை வாழ்க்கை முறை மற்றும் உணவின் மூலம் சரிசெய்ய முடியும்.
மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு கெட்ட பழக்கங்களும், உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகமானால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். ஏனெனில் கொலஸ்ட்ராலுக்கும் நோய்களுக்கும் நிறைய இணைப்புக்கள் உள்ளன. அதிலும் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால், அது இதய நோயை உண்டாக்கி, நாளடைவில் மரணத்திற்கும் வழிவகுக்கும்.
ஆகவே உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நிச்சயம் கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும். தற்போது அந்த கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிகள்
* வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்வதில் முதன்மையானது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.
* உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலின் அளவை அவ்வப்போது பரிசோதித்தால், அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் எதையும் பின்பற்ற முடியும்.
* கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எடையை குறைத்தலும் ஒரு வழி தான். ஆம், பொதுவாக உடல் பருமன் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாவதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும்.
* உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது புகைப்பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரித்துவிடும்.
* உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.
* சில உணவுகள் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், அப்பிள், பிஸ்தா போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
* அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு ஒரு எளிய வழியென்றால், அது க்ரீன் டீ குடிப்பது தான். ஏனெனில் க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இது அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
* சோயா உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்து வந்தாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைந்து, உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.
* கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க வேண்டுமெனில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான இரத்த சர்க்கரையின் அளவானது, இருதய
Home »
Beauty-Tips
» நாளாந்த நடவடிக்கைகள் மூலம் எளிய வழியில் எவ்வாறு கொழுப்பை குறைக்கலாம்?
நாளாந்த நடவடிக்கைகள் மூலம் எளிய வழியில் எவ்வாறு கொழுப்பை குறைக்கலாம்?
Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 8:39 AM
Related articles
- அழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள்.
- முகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான வீட்டு ஃபேஷியல்.
- உங்கள் பளீச் முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருவைப் போக்க எளிய வழிகள் சில!
- வேறும் ஏழே நாட்களில் ஒளிரும் வெண்மை அழகைப் பெற்றிட.
- சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பேண மிகச்சிறந்த சைவ உணவுகள்: சிறுநீரகக் கற்ககளை அளிக்கும்!
- ஒரே வாரத்தில் பளபளப்பான அழகைப்பெற வேண்டுமா?
Labels:
Beauty-Tips
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !