வடகொரியாவின் ஆயுதக் கப்பலில் இருந்து கியூபாவின் மிக் ரக யுத்த ஜெட் விமானங்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பனாமா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1950களில் சோவியத் ஒன்றியத்தால் தயாரிக்கப்பட்ட சுப்பர் சொனிக் ரக விமானங்கள் இரண்டும் இந்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இரண்டு ஏவுகணை ராடர் கட்டமைப்புக்களையும் குறித்த கப்பலில் இருந்து மீட்டுள்ளதாக பனாமா நாட்டு ஜனாதிபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த ஆயுத உபரணங்களுடன் வடகொரியாவிற்கு சென்ற குறித்த கப்பல் கடந்த வாரம் பனாமா நாட்டு அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டது.
எனினும் இந்த உபகரணங்களை திருத்தம் செய்வதற்கென வடகொரியாவிற்கு அனுப்பியதாக கியூப வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. சர்ச்சைக்குரிய அணுத்திட்டங்கள் காரணமாக வடகொரியாவிற்கு ஆயுதங்களை விநியோகிக்க ஐக்கிய நாடுகள் சபை தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் இந்த கப்பல் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையை பனாமா கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்பிரகாரம் ஐ.நா அதிகாரிகள் குழு அடுத்த மாத ஆரம்பத்தில் பனாமாவிற்கு விஜயம் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !