அமெரிக்காவில் பல மணி நேரமாக பூட்டிய காருக்குள் இருந்த 11 மாத குழந்தை பரிதாபமாக இருந்தது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த கேட்டி லுவாங் (வயது 31), ஹோம்வுட் நகரில் டௌன்டவுன் பகுதியில் நகம் அழகு செய்யும் கடையை நடத்தி வருகிறார். லுவாங் தனது 11 மாத குழந்தை கேப்ரியல்லாவை காரின் பின் சீட்டில் வைத்து கொண்டு அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.
செல்லும் வழியில் தனது குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு செல்வது வழக்கம். ஆனால் அன்று குழந்தை, காரில் இருப்பதையே மறந்து விட்டார். காலை 10 மணிக்கு காரை நிறுத்தி விட்டு மும்முரமாக தனது பணியில் ஈடுபட்டார். பிற்பகல் 1.20 மணிக்கு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ''ஏன் உங்கள் குழந்தையை இன்று இங்கு விடவில்லை'' என்று போனில் கேட்ட பிறகு தான் லுவாங்குக்கு குழந்தையின் நினைப்பே வந்தது.
வெளியே சென்று காரில் பார்த்தபோது குழந்தை செயலற்று இருந்தது, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றார். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கோடைகாலம் என்பதால் வெளியே 90 டிகிரியும், காருக்கு உள்ளே 127 டிகிரியும் வெப்பம் இருந்தது. 3 மணி நேரம் குழந்தை காரில் இருந்ததால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !