Headlines News :
Home » » வார பலன். (05.07.2013 - 11.07.2013 வரை)

வார பலன். (05.07.2013 - 11.07.2013 வரை)

Written By TamilDiscovery on Friday, July 5, 2013 | 12:02 AM

மேஷம் பொது:
நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். புதிய வாகனம் வாங்க இது உகந்த நேரம் அன்று. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெண்களுக்கு: புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். அவசர செலவுக்கு நண்பர்களிடம் உதவி கேட்க நேரலாம். பகைகளை போக்க முயற்சி செய்வீர்கள். வேலை பார்ப்போருக்கு கொடுக்கும் வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கலாம். உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கைகளை தற்போதைக்கு முன்வைக்க வேண்டாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்

ரிஷபம் பொது:
உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். எதிர்பாராத பண வரவு உண்டு. சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சிலருக்கு புதிய வேலை கிடைக்கலாம். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை.

மிதுனம் பொது:
உங்கள் காரியங்களில் கண்ணாய் இருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெண்களுக்கு: தாய் வழி உறவினர் வீட்டு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொருளுதவி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் நடத்த திட்டமிட்டிருந்த சுப காரியம் தள்ளிப் போகலாம். எதிலும் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் நட்புடன் பழகுவது ஆறுதலாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

கடகம் பொது:
பொருளாதாரம் மேம்படும். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதையும் யோசித்து நிதானமாக செய்யவும். பெண்களுக்கு: சுப காரியங்கள் சிறு தடங்கலுக்கு பிறகு நடக்கும். குடும்பத்தாரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள். விடுப்பில் சென்றிருக்கும் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

சிம்மம் பொது:
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உடல் நலம் நன்றாக இருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நண்பரை சந்திப்பீர்கள். பெண்களுக்கு: வீடு, வாகனம் வாங்க இது உகந்த வாரம் இல்லை. சுப காரியங்கள் நடத்த திட்டமிடுவீர்கள். உடன் பிறப்புகள் பாசமாக இருப்பார்கள். யாருடனும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலை பளு குறையும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு நல்லது செய்வார்கள். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும்.

கன்னி பொது:
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனை தீரும். உடல் நலனில் கவனம் தேவை. சமுதாயத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். பெண்களுக்கு: கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். குடும்பத்தில் அமைதி இருக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கலாம். எதிர்பார்த்த உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம் பொது:
சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடலம் நலம் மேம்படும். கடிதப் போக்குவரத்து சாதகமாக இருக்கும். நெருக்கமானவர்களிடம் உங்கள் ரகசியங்களை கூற வேண்டாம். பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். சுப காரியங்கள் நடத்த முயற்சி செய்வீர்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும்.

விருச்சிகம் பொது:
எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் பாசமாக இருப்பார்கள். ஆன்மீக பலம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. பெண்களுக்கு: குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். அதைப் பார்த்து நீங்கள் மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடன் தொல்லைகள் தீரும். வேலை பார்ப்போருக்கு: நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்தியைக் கேட்பீர்கள். வேலை பளு குறையும். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். யாருக்கும் உங்கள் பெயரில் மட்டும் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

தனுசு பொது:
வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட இது உகந்த வாரம். தடைபட்ட காரியங்கள் கூட நல்லபடியாக நடக்கும். முகத்தில் புதுப்பொலிவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் செல்லவும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சுப காரியங்கள் நடத்தி மகிழ்வீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்கக்கூடும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பிறகு செய்யலாம் என்று நினைத்த வேலை ஒன்றை உடனே செய்து முடிக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம் பொது:
தேவையில்லாத பயணங்களை தள்ளிப் போடவும். மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள். சிலர் புனிதயாத்திரை சென்று வரக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தார் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சில பிரச்சனைகளை நீங்களேசாமர்த்தியமாக தீர்த்து வைப்பீர்கள். பெரியோரின் ஆசி கிடைக்கும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அதனால் வேலை பளு குறையும். ஊதியத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த கடன் தொகை தக்க சமயத்தில் கிடைக்கும்.

கும்பம் பொது:
வரவுக்கேற்ற செலவும் உண்டு. தீயோர் நட்பு வேண்டாம். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று பிரச்சனைகளை தவிர்க்கவும். உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவர் மீது அன்பாக இருப்பீர்கள். உறவினர்களுக்கு வாக்கு கொடுக்க வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வு கிடைக்கலாம். சிலர் அதிக ஆதாயமுள்ள வேலை கிடைத்து செல்லக்கூடும். அலுவலகத்தில் குடும்ப பிரச்சனைகள் பற்றி பேச வேண்டாம். சக ஊழியர்களுடன் நட்புடன் பழகவும்.

மீனம் பொது:
சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பண வரவுக்கு குறைவிருக்காது. எதிரிகள் அடங்கிவிடுவார்கள். உங்கள் வசீகர பேச்சால் பிறரை கவர்வீர்கள். பெண்களுக்கு: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். குடும்ப ஒற்றுமையை காக்க பாடுபடுவீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு மேலும் அதிகரிக்கும். முக்கிய வேலை ஒன்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டி இருக்கும். உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிலும் நிதானமாக இருக்கவும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template