நிவித்திகலை தொலஸ்வல இல 01 பிரிவில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவித்திகலை பிரதேசத்தில் அதிஷ்ட இலாபச்சீட்டு விற்பனை செய்யும் எச்.எஸ்.நிஷாந்த (வயது 33) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட தொலஸ்வல தோட்ட இலக்கம் 01 பிரிவில் வசிக்கும் இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதனையடுத்து மேற்படி தோட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் நகரப் பகுதிகளுக்கும் தொழிலுக்கு செல்வதற்கும் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இப்பகுதியில் கலவரங்கள் ஏற்படாதவண்ணம் பொலிஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டப்பகுதிக்கு நேற்று காலை சப்ரபமுவ மாகாண சபையும் இ.தொ.கா. உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் நேரில் சென்று தோட்ட மக்களுடன் விபரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 25 க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவத்தையடுத்து நிவித்திகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் , பி.ராஜதுரை எம்.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் உள்ளிட்ட அரசியல் வாதிகளின் கவணத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெரும்பான்மை இன 33 வயது இளைஞன் வெட்டிக் கொலை: பதற்ற நிலை தொடர்கிறது!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:06 AM
Related articles
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !