ஆந்திர சினிமாவில் ரம்யாகிருஷ்ணன், மீனா, மறைந்த செளந்தர்யா போன்ற நடிகைகளுக்குப் பிறகு கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவான படங்களில் நடித்து வந்தவர் அனுஷ்கா. அவரது உயரமும், உடல்கட்டும் சிறந்த கதாபாத்திரங்களை சுமந்து நடிப்பதற்கு பொருத்தமாக இருந்ததால், அருந்ததி போன்ற பல படங்களில் நடித்தார்.
அதன்பிறகு கோலிவுட்டில் ரெண்டு என்ற படத்தில் அறிமுகமாகி அதில் பெரிய பெயர் ஒன்றும் கிடைக்காததால், ஆந்திராவுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார். பின்னர் அவர் நடித்த அருந்ததி தமிழிலும் அவருக்கு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்ததால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
ஆனாலும் அனுஷ்காவுக்கு சாதாரணமாக எல்லா நடிகைகளும் நடிப்பது போல் மரத்தை சுற்றி டூயட் பாடும் வாய்ப்புகள்தான் கிடைத்தது.
அதனால் கிடைத்த வாய்ப்புகளை சில ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அனுஷ்கா, இப்போது மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் ராணி ருத்ரம்மாதேவி படவாய்ப்பு கிடைக்கவே மீண்டும் தெலுங்குக்கு இடம் பெயர்ந்து விட்டார். அப்படத்தில், அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களே தோற்றுப்போகும் அளவுக்கு சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம் அனுஷ்கா, வாள் சண்டை காட்சிகளில் எதிரிகளை சுழற்றியடித்தபடி, காலால் எட்டி உதைத்து அவர் பந்தாடுவதைப் பார்த்து உடன் நடிக்கும் சக நடிகர்களே மிரண்டுபோய் நிற்கிறார்களாம்.
அப்படியொரு அபார நடிப்பை வெளிப்படுத்தி வரும் அனுஷ்கா, இனி மரத்தை சுற்றி டூயட் பாடும் வேடங்களில நடிப்பதில்லை என்றும் தன்னைத்தேடி வந்த சில பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பியுள்ளாராம்.
Home »
Cinema
» சக நடிகர்கள் மிரண்டு போகும் அளவிற்க்கு எதிரிகளை காலால் எட்டி உதைக்கும் அனுஷ்கா: ராணி ருத்ரம்மாதேவி.
சக நடிகர்கள் மிரண்டு போகும் அளவிற்க்கு எதிரிகளை காலால் எட்டி உதைக்கும் அனுஷ்கா: ராணி ருத்ரம்மாதேவி.
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 10:48 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !