குடிபோதையில் யாழ். பண்ணை இரும்புப் பாலத்தின் மேல் ஏறி கடலினுள் குதித்த குடும்பஸ்தரொருவர் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த நல்லையா விஜயகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினமான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த குடும்பஸ்தர் குடிபோதையுடன் தனது நண்பர்களுடன் கடலினுள் குளிப்பதற்காக பண்ணை இரும்புப் பாலத்தடிக்குச் சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது பண்ணை இரும்புப் பாலத்தின மீது ஏறிக் கடலினுள் குதித்து நீந்தியுள்ளார். இதனால் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு சுழியினுள் மாட்டிக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நண்பர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் பிற்பகல் இறந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதித் திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !