டைரக்டர் பி.வாசு டைரக்ட் செய்யப்போகும் ஹாலிவுட் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க மறுத்து விட்டாராம். ரஜினியையே வைத்து படம் டைரக்ட் செய்து விட்டார் பி.வாசு. அதே பாணியில் விஜய்யை வைத்தும் ஒரு படத்தை டைரக்ட் பண்ணலாம், அதுவும் ஹாலிவுட் படம் என்று திட்டம் போட்ட டைரக்டர் பி.வாசு தனது முயற்சியில் தோல்வியடைந்து விட்டார்.
தமிழில் ரிலீஸான சந்திரமுகி படத்தை பார்த்த அமெரிக்க வாழ் இலங்கை தமிழர் ராஜ்திருசெல்வன் நேரடியாக பி.வாசுவை பார்த்து ஹாலிவுட்ல வந்து இதே மாதிரி ஒரு படத்தை எடுத்துக் குடுங்க என்றாராம். அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சு என்று முடிவெடுத்த பி.வாசு, இங்கிருந்து பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் அனில்கபூர், அவரது மகள் சோனம் கபூர் ஆகியோரையெல்லாம் படத்தில் நடிக்க கமிட் செய்துவிட்டார்.
curry in love என்ற அந்த ஹாலிவுட் படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்யிடம் பேசிக்கொண்டிருந்தார்கள், ஆனால் தமிழ் தவிர வேற்று மொழிப்படங்களில் நடிக்க விரும்பாத விஜய் இந்த ஹாலிவுட் பட வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.
ஆனால் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஹீரோவாக விஜய் நடிக்கப் போகிறார் என்று வெளியிடப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் டைரக்டர் பி.வாசுவின் நெருங்கிய வட்டத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் “விஜய் நடிக்கவில்லை” என்று மறுத்தனர்.
விஜய் தொடர்ச்சியாக மூன்று படங்களை வைத்திருப்பதால் இப்போதைக்கு இந்த ஹாலிவுட் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாராம்.
அப்படியானால் அந்த இணையதளத்தில் விஜய் நடிக்கப்போவதாக போட்டிருக்கிறதே? என்று கேட்டதற்கு, அது அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்வக்கோளாரினால் அப்படி ஒரு பொய்ச்செய்தியை போட்டிருக்கிறார்” என்றார்கள்.
இப்படி விஜய்யின் கால்ஷீட்டே வாங்காமல் அவர் போட்டோவைப் போட்டு கால்ஷீட் காரியத்தை கெடுத்த தயாரிப்பாளரை நினைத்து டென்ஷனான பி.வாசு வேறு வழியில்லாமல் இப்போது ஒரு புது ஹீரோவை தேடிவருகிறாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !