நியூயோர்க்கில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அதனை ஆற்றில் இறக்கிய விமானியின் சமயோஜித புத்தியால் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள வால் ஸ்ட்ரீட் பகுதியில் இருந்து ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேரை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டு சென்றது. புறப்பட்ட 12வது நிமிடத்தில் தேவையான உந்து சக்தி கிடைக்காததால் விமானியால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை.
அப்போது, ஹட்சன் ஆற்றின் அருகேயுள்ள 79வது தெருவுக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்துக்கொண்டிருந்தது. மிகவும் சிக்கலான சூழ்நிலையில் சமயோஜிதமாக முடிவெடுத்த விமானி, ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் நான்கு பயணிகளையும், விமானியையும் ஆற்றில் இருந்து வெளியேற்றினர்.
ஹெலிகாப்டரை ஆற்றில் இறக்கி இருக்காவிட்டால் கட்டிடங்கள் மீது மோதி பெரும் விபத்தும், உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !