இலங்கையைத் தொடர்ந்து இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது.
முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கையை வென்றது. இந்த நிலையில் நேற்று 2வது போட்டி நடந்தது. அதில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் மோதின. இதிலும் மேற்கு இந்தியத் தீவுகளே வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தத் தோல்வியைச் சந்தித்தது இந்தியா.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய, இந்திய அணி 229 ஓட்டங்களை எடுத்தது. ரோஹித் சர்மா 60 ஓட்டங்களையும் ரெய்னா நிதானமாக ஆடி 44 ஓட்டங்களையும் குவித்தார்.
அதன் பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுதாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது. இதன்படி 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் அந்த அணி வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான்சன் சாமுவேல்ஸ் 97 ஓட்டங்களைக் குவித்தார்.
கடைசி நேரத்தில் ஆடிய கெமர் ரோச் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை எடுத்தார். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !