சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான சேவை வழங்குநரான டைகர் எயார்வேய்ஸ் இலங்கைக்கான தனது விமான சேவைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு முன்னர் இலங்கைக்கான தனது சேவைகளை ஆரம்பித்த டைகர் எயார்வேய்ஸ் நிறுவனம், மூன்று வார காலப்பகுதிக்கு தமது சேவைகளை இடைநிறுத்துவது குறித்து அறிவித்திருந்தது.
செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதிக்கு சுமார் 700 விமானப் பயணிகள் வரை தமது போக்குவரத்துக்கான முற்பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு இந்த சேவை இடைநிறுத்தம் குறித்த அறிவிப்புகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் எம்ஏசி ஹோல்டிங்ஸ் ஏவியேஷன் பிரிவின் பொது முகாமையாளர் திசும் ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 31ஆம் திகதியிலிருந்து தமது சேவைகளை ஆரம்பித்த இந்த விமான சேவையினூடாக இது வரையில் 35,000 – 40,000 பயணிகள் வரை பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சேவை இடைநிறுத்தததுக்கான காரணம், விமான பயணத்தின் போது போதியளவு பயணிகள் காணப்பட்ட போதிலும், ஒவ்வொரு டிக்கட் விற்பனையின் மூலமாகவும் தமக்கு போதியளவு வருமானம் கிடைப்பதில்லை என டைகர் எயார்வேய்ஸ் அறிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !