செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 12ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி ஏ. எம். எம். றியாழ் விளக்கமறியல் நீடிப்புக்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேக நபர்களான செங்கலடி மத்திய கல்லூரியில் க. பொ.த. சதாரண வகுப்பில் கல்வி பயின்ற கொல்லப்பட்டவர்களது இரண்டாவது மகள் ரகு தக்ஷனா, சிவனேசராசா ஆஜந் குமாரசிங்கம் நிலக்ஷன் மற்றும் புவனேந்திரன் சுமன் ஆகியோர் கடந்த 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்கள் இம்முறை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பத்தில் கிராம சேவை அதிகாரியின் உறுதிப்படுத்தலை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜர் செய்யப்பட்டனர்.
செங்கலடி நகரில் ஏப்பிரல் 07ஆம் திகதி பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த பொலிஸார் கொல்லப்பட்டவர்களது இளைய மகள் மற்றும் அவரது வகுப்பறை நண்பர்கள் மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !