சென்னை: குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு ஏகப்பட்ட இலவசப் பொருள்கள், அன்னதானம் என வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வந்த விஜய், இந்த முறை அமைதியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்து அளித்து பிறந்த நாளை 'அடக்கமாகக்' கொண்டாடினார்.
இன்று விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் இந்த முறை விமரிசையாக பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது. இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்ட விஜய், அங்கு படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர். கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய்.
படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணி பரிமாறி பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!
Written By TamilDiscovery on Saturday, June 22, 2013 | 3:05 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !