Headlines News :
Home » » இராசி பலன்கள்: இராசி நாதர்கள் உங்களுக்கு என்ன தர போகின்றனர்?

இராசி பலன்கள்: இராசி நாதர்கள் உங்களுக்கு என்ன தர போகின்றனர்?

Written By TamilDiscovery on Saturday, June 22, 2013 | 3:24 AM

மேஷம்:
சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வேலைகளை பதட்டப்படாமல் செய்து முடிக்கவும். சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

ரிஷபம்:
நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்வு இனிமை பெறும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கணவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். உயர் அதிகாரிகளால் பிரச்சனை ஏற்படலாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். வேலையில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்:
எடுக்கும் காரியங்களை தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளின் பலம் குறையும். உங்கள் அந்தஸ்துக்கு எந்த குறைவும் இருக்காது. எதிலும் பதட்டப்படாமல் இருக்கவும். பெண்களுக்கு: பணப் புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் உற்சாகமாக பணியாற்றுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கடகம்:
எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உடன் பிறப்புகள் பாசமாக இருப்பார்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். குடும்ப தலைவருக்கு புதிய வேலை கிடைக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலை பார்ப்போருக்கு: பணி நிமித்த பயணங்களை தள்ளிப் போடுவது நல்லது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக பிரச்சனை ஒன்றுக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

சிம்மம்:
உங்கள் காரியங்கள் அதிக முயற்சிக்கு பிறகே வெற்றிகரமாக முடியும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பயணத்தின்போது கவனமாக இருப்பது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்ளவும். பெண்களுக்கு: நெருக்கமானவர்களுடன் விரோதம் ஏற்படலாம். குடும்ப சூழலில் மாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கலாம். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள்.

கன்னி:
பண வரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். பயணங்களால் நன்மை உண்டு. நீண்ட காலம் பார்க்காத நண்பர் ஒருவரை சந்தித்து மகிழக்கூடும். பெண்களுக்கு: புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. கடன் தொல்லைகள் இருக்காது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நட்புடன் பழகவும்.

துலாம்:
பண வரவுக்கு குறைவிருக்காது. எடுக்கும் காரியங்கள் உங்களின் விடாமுயற்சியால் வெற்றி பெறும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய வாகனம் வாங்க இது உகந்த வாரம் அன்று. பெண்களுக்கு: கணவர் பாசமாக இருப்பார். ஆன்மீக பலம் அதிகரிக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செல்லும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்று பிரச்சனையை தவிர்க்கவும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். அதனால் வேலை பளு குறையும். அலுவலகத்தில் கேட்டிருந்த கடன் தொகை கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

விருச்சிகம்:
சமுதாயத்தில் உங்களின் மதிப்பு சற்று குறையலாம். பண வரவு நன்றாக இருக்கும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். உடன் பிறப்புகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி செய்வீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஓய்வின்றி உழைக்க வேண்டி இருக்கும். யாருக்கும் உங்கள்

தனுசு:
சிலருக்கு புனித பயணம் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். மனம் மகிழும் செய்திகளை கேட்பீர்கள். பெண்களுக்கு: உறவினர்களை அனுசரித்துச் சென்று பிரச்சனைகளை தவிர்க்கவும். புதிய ஆடைகள் வாங்கி மகிழக்கூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். உடல் நலனில் கவனமாக இருக்கவும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கால நேரமின்றி உழைக்க நேரலாம். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மகரம்:
தடைகளை தகர்த்தெறிந்து உங்கள் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். சந்திக்க நினைத்த நண்பரை வழியில் சந்தித்து மகிழக்கூடும். பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விடுப்பில் சென்றுள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

கும்பம்:
பொருளாதார பிரச்சனைகள் தீரும். திட்டமிட்ட காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெண்களுக்கு: உறவினர்கள் தானாக வந்து உதவுவார்கள். குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். பணி நிமித்த பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம்.

மீனம்:
வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வில்லங்கம் செய்வோரிடம் இருந்து தள்ளி இருக்கவும். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண பிரச்சனை ஏற்படலாம். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். பயணத்தின்போது உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்தபடி பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. பிறகு செய்யலாம் என்று நினைத்த வேலை ஒன்றை உடனே செய்ய நேரலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வீர்கள். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template