புவனேஷ்வர்: ஒடிசாவில் மனைவியைக் கொன்று , உடலை 300 துண்டங்களாக வெட்டி அழிக்க முற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ராணுவத்தில் மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஒடிசாவைச் சேர்ந்த 71 வயதான சோம்நாத் பரிடா. இவரது மனைவிக்கு 62 வயது. இவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று, பரிடாவின் மைத்துனர் தன் சகோதரியை பார்க்க வந்த போது, அவரை வீட்டிற்கு உள்ளே விட மறுத்துள்ளார் பரிடா.
இதனால் சந்தேகமடைந்த பரிடாவின் மைத்துனர், வீட்டில் பிணவாடை வீசுவதாக போலீசில் புகார் செய்துள்ளார். அவரின் புகாரின் பேரில், பரிடாவின் வீட்டை சோதனையிட்ட போலீசார் அதிர்ந்து விட்டனர். காரணம் பரிடா தனது மனைவியைக் கொலை செய்து, உடலை சுமார் 300 சிறு துண்டங்களாக வெட்டி மறைத்து வைத்திருந்தார்.
பரிடா, தன் மனைவியைக் கொலை செய்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை வெட்டி 300 துண்டுகளாக கூறு போட்ட கொலைவெறி கணவன்!
Written By TamilDiscovery on Saturday, June 22, 2013 | 3:33 AM
Related articles
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !