யாழ்.மாவட்டத்தில் குடும்பப் பிணக்குகள் காரணமாக இளம் குடும்பப் பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸாரின் குடும்ப நல உறவு மற்றும் சிறுவர் பெண்களுக்கான பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. யாழில் தினசரி குடும்பப் பிணக்குகள் அதிகரித்து வருகின்றது. இதனால் விவகாரத்துக் கோருவேரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குடும்பத்தை சீரான முறையில் கொண்டு செல்லும் தொழில் முறைமை யாழில் இல்லையென அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு சிறுவயதுத் திருமணங்கள், காதல் விவகாரங்கள், கள்ளக் காதல் விவகாரங்கள், குடும்ப வறுமை, பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களினால் இளம் குடும்பப் பெண்கள் தங்களைத் தாங்ளே அழித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குடும்ப நல உறவு மற்றும் சிறுவர் பெண்களுக்கான பிரிவு மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது தெரிய வந்துள்ளது.
சரியான முறையில் குடும்ப ஆலோசனை வழங்கப்படாமையினால் இந்தப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்ட்டு வருவதாக குடும்ப நல உறவு மற்றும் சிறுவர் பெண்களுக்கான பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !