குன்னூர் : வெலிங்டன் ராணுவ மையத்தில், பயிற்சி பெற்று வந்த, இலங்கை ராணுவ அதிகாரிகள், திடீரென பெங்களூருக்கு, நேற்று புறப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில், இலங்கை விங் கமாண்டர் பண்டார திசனாயகே மற்றும் மேஜர் ஹரிசந்திரஎட்டின் ஆகியோர், பயிற்சி பெற்று வந்தனர்.
பிரமருக்கு கடிதம்:"இவர்களுக்கு தமிழகத்தில், பயிற்சி அளிக்கக் கூடாது; உடனடியாக வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு, கடிதம் எழுதியுள்ளார். இலங்கை ராணுவ அதிகாரிகளை, வெளியேற்றக் கோரி, போராட்டமும் திவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, குன்னூர் மற்றும் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மைய பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர், பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், இலங் கை ராணுவ அதிகாரிகள் இருவரும், நேற்று காலை, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து டேராடூன் அனுப்பப்படுவர் என, கூறப்படுகிறது.
கடையடைப்பு, மறியல்:
குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களை வெளியேற்ற வலியுறுத்தி, கூடலூர், பந்தலூரில் கடையடைப்பு நடந்தது; 62 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை ராணுவத்துக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்க எதிர்ப்புத் தெரிவித்து, வி.சி., - ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில், கூடலூர், பந்தலூர் பகுதிகளில், நேற்று, "பந்த்' நடந்தது.வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, ஜீப் போன்ற தனியார் வாகனங்களும் இயங்காததால், பொதுமக்களும், மாணவர்களும் சிரமப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடலூரில் சாலை மறியலில் ஈடுப்பட்ட, 29 பேரை போலீசார் கைது செய்தனர்.பந்தலூரில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, "நாம் தமிழர் கட்சியின்' பந்தலூர் தாலுகா அமைப்பாளர் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட, 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !