உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய முயற்சியில் டியானே-2 என்ற அதிவேக கணினி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கம்ப்யூட்டர் விநாடிக்கு 54.9 குவாடிரில்லியன் வேகத்தில் செயல்படும் ஆற்றல் கொண்டது என சீனாவின் தேசிய தொழில்நுட்பப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 2011 வரை சீனாவின் டியானே-1ஏ கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக வளங்கியது. அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானின் கே கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக இருந்தது.
தற்போது டியானே-2 அல்லது மில்கி வே-2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கணினியைக் கண்டுபிடித்ததன் மூலம் தகவல் தொடர்புத்துறையில் சீனா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் உள்பட பல்வேறு மூலப்பொருள்கள் சீனாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home »
Technology
» உலகின் அதிவேக கணினி டியானே-2 சீனாவின் புதிய சாதனை.
உலகின் அதிவேக கணினி டியானே-2 சீனாவின் புதிய சாதனை.
Written By TamilDiscovery on Monday, June 17, 2013 | 10:30 PM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !