Headlines News :
Home » » மேட்டூர் அணைக்குள் தெரியும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் ரகசிய அறையில் புதையல்?

மேட்டூர் அணைக்குள் தெரியும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் ரகசிய அறையில் புதையல்?

Written By TamilDiscovery on Monday, June 17, 2013 | 10:08 PM

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர்.

மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலையும், மண்டபத்தையும் காண்பதற்கு தர்மபுரி மாவட்டம் பூச்சூர் பகுதியில் இருந்தும், சேலம் மாவட்டத்தில் நெருப்பூர், கொளத்தூர், மேட்டூர் பகுதியில் இருந்தும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அரசர் காலத்து கோயில் என்பதால், சாமியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் தங்க நகைகளும், மன்னர்கள் அளித்த வைர, வைடூரிய நகைகளும் கோயில் கீழ்தளத்தில் ரகசிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

தற்போது இந்த பாதுகாப்பு அறையை சுற்றிலும் சேறும், சகதியும் 20 அடி உயரத்துக்கு மூடியபடி காணப்படுகிறது. கீழ் தளத்தில் ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ள தங்க நகை, வைர, வைடூரியங்களை பூதங்கள் பாதுகாத்து வருவதாக முன்னோர்கள் சொன்னதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனிடையே, புதையல் தேடும் கும்பல் இங்கு நள்ளிரவில் நடமாடி நோட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் நீர்பிடிப்பு பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களிடையே பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template