
யூடியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைத்ததுக்கு கொள்ள விரும்புவீர்கள் ஆயினும் அதற்குத் தகுந்த மென்பொருட்கள் (downloader) உங்களது கணணியிலோ அலது நீங்கள் உபயோகிக்கும் வேறு சாதனங்களிலோ நிறுவியிருக்கவில்லையெனில், உங்களால் வீடியோக்களை தரவிறக்கிகொள்ள முடியாது.
அனால் மேற்குறிப்பிடப்பட்ட தளமானது இலகுவான முறையில் வீடியோக்களைத் தரவிறக்கிகொள்ள உதவி புரிகின்றது. தரவிறக்கிகொள்ள நீங்கள் அந்தத்தளத்துக்கு நேரடியாகச் செல்லத் தேவை இல்லை.
யூடியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்வையிடும் போது அந்த வீடியோவை தரவிறக்க முடிவு செய்தால், செய்ய வேண்டியது இதுதான். அட்ரெஸ்பாரில் (link) http://www.youtube.com/watch?v=qFrj9tMkuYU இவ்வாறு காணப்படும் இதிலே நீங்கள் சிறிய மாற்றம் ஒன்றினைச் செய்தால் போதுமானது.
அதாவது http://www.(ss)youtube.com/watch?v=qFrj9tMkuYU சிவப்பு மையினால் குறிப்பிடப்பட வாறு (ss) இடைவெளியில் அதாவது www. இந்த இடைவெளியில் youtube.com/watch?v=qFrj9tMkuYU இரண்டு SS எழுத்துக்களை இணைப்பதன் மூலம் savefrom.ne எனும் இத் தளத்திற்க்குச் செல்லும். சென்ற பின்னர் உங்களுக்கு தேவையான தரம் மற்றும், போர்மெட் என்பவற்றைத் தெரிவு செய்து கொண்டு தரவிறக்கம் (download) என்பதனை அழுத்துவதன் மூலம் வீடியோ தரவிறக்கப்படும். இத்தளத்தில் நீங்கள் விரும்பிய போர்மெட்க்களில் விரும்பிய தரத்தில் (240 to HD quality) தரவிறக்கிக் கொள்ளலாம்.
உயர் தரத்தினில் தரவிறக்கிக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் பார்க்கும் வீடியோ உயர் தரத்தில் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தவித சிரமமுமின்றி மிக விரைவாக தரவிறக்கி கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகம் ஏதும் இருந்தால் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !