ஹைட்டியில் ஐ.நா படையில் கடமையிலுள்ள இலங்கை இராணுவ வீரர் ஒருவர் 18 வயது பெண்ணொருவரை பலாத்காரம் செய்தார் என்று சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் விசாரித்து வருகின்றது என்று இலங்கை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்தார்.
துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளும் இதை விசாரித்து வருகின்றது நாம் தனியான விசாரனை யொன்றை தொடங்கியுள்ளோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரி குற்றம் இழைத்தவராக காணப்படின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் றுவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க சென்ற நீதவான் சம்பவம் நடந்த இடத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட ஆணுறையொன்றை கண்டுள்ளார்.
இது தொடர்பிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. விசாரனை நடாத்தப்பட்டு வருகின்ற குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டின் இன்னொரு பகுதியிலுள்ள முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த 860 படைவீரர்கள் ஹைட்டியில் ஜநா சமாதானப்படையில் கடமை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !