
தென் ஆப்பிரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா. ஐந்தாண்டுகள் மட்டும் பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.
95 வயதாகும் நெல்சன் மண்டேலாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால், கடந்த மாதம் 8ம் திகதி பிரட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருந்துவந்த அவருக்கு உயிர் காப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் இன்று வீடு திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் செய்தி கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி மாளிகை இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக வெளியான செய்தி தவறான செய்தியாகும் என தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !