
அடுத்த விஜய் படத்துக்கு வருகிற பொங்கல்வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரேயடியாக பட்டினி போட முடியாதே.
அதனால் எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதி ஜில்லா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். நேசன் இயக்க ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் ஜில்லா மீது எதிர்பார்ப்பு அதிகம்.
நேசன் என்ற ஒரேயொரு படம் எடுத்தவரின் கதையில் விஜய், மோகன்லால் என இரு பெரிய நடிகர்கள் விரும்பி நடிக்கிறார்கள் என்றால், அது என்ன கதையாக இருக்கும்? இந்த கேள்விக்குறிதான் ஜில்லா மீதான எதிர்பார்ப்பின் ஆதாரம்.
பூர்ணிமா, காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லாவின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. டி.இமான் இசையமைக்கிறார். ஜில்லாவில் விஜய் அழகான தோற்றத்தில் வருகிறார் என நேசன் சொன்னாலும் சொன்னார்... அப்படி என்ன அழகு என்று பார்க்க ஒரு கும்பல் முட்டி மோதுகிறது.
செப்டம்பர் 9 அந்த அழகு இரகசியம் தெரிந்துவிடும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !