தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலரை சமூகத்துடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி புனர்வாழ்வு பெற்ற 108 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி வவுனியா நகர மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 12,000 போராளிகள் அரச படைகளிடம் சரணடைந்தனர்.
அதில் 11,651 பேர் புனர்வாழ்வின் பின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்னும் 241 பேர் புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !