இந்தியாவின் ஆந்திராவில் கல்லூரி மாணவி ஒருவர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாணவி பொலிசாரிடம் முன்னதாகவே தெரிவித்த போதிலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவர் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்துவந்துள்ளார்.
இந்த நபரை புறக்கணித்துவந்த அந்த மாணவி அங்குள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்துவருகிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா அப்பெண் மீது ஆசிட் தாக்குதல் செய்வேன் என மிரட்டியுள்ளார்.
உடனடியாக அப்பெண் முன்னெச்சரிக்கையாக அப்பகுதி பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளார், ஆனால், பொலிசார் இது தொடர்பாக எந்த நடவிடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பெண்ணை தொந்தரவு செய்துவந்த ராகவேந்திராவிற்கு திருமணம் நடைபெற்றது. இனிமேல் ராகவேந்திரா தன்னை தொல்லை செய்யமாட்டன் என எண்ணிய மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
யாரும் எதிர்பாராத வேளையில், ராகவேந்திரா அப்பெண் மீது ஆசிட்டை ஊற்றினான். இத்தாக்குதலில் இருந்து தப்பிக்க எண்ணிய அப்பெண், ஒடமுயன்றப்போதும் எந்த பயனுமில்லாமல் போனது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அம்மாணவி அளித்த வாக்குமூலத்தில் பொலிசாரை தாக்கி பேசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !