இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த யுத்த சூனிய வலயம் (No Fire Zone) என்ற ஆவணப்படத்தை திரையிட்ட மனித உரிமை செயற்பாட்டளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மலேசிய - கோலாலம்பூர் பகுதியில் குறித்த ஆவணப்படத்தை திரையிட்ட மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் மீதே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்ட தினத்தன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆவணப்படத்தை தயாரித்த கெலம் மெக்ரேவும் அடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் மீது இன்று (19) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !