சீனாவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு அது குறித்த விசாரணையும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதனிடையில் அந்தக் குற்றவாளிகளில் மூன்று பேர் தங்களின் குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதற்கு நஷ்ட ஈடாக 46 இலட்ச ரூபாய்க்கும் மேலாக தர முன்வந்ததால் அந்தப் பெண் அவர்களை மன்னித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
குற்றம் செய்தவர்களில், மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவரான லி ஷுவான்ஜியாங்கின், 17 வயது மகனான லி டியாங்கியும் ஒருவராக உள்ளது, இந்த மன்னிப்பை சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றிவிட்டது.
பாடகியான டியாங்கியின் தாயார் மெங் கீ தனது மகன் அப்பாவி என்றும், அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர்களின் வக்கீலான ஸாவோ யுன்ஹெங் அந்த மூன்று பேரும் தங்களின் தவறை ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
மற்ற இரண்டு குற்றவாளிகளும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த செயல் ஏழை, பணக்காரர்களிடையில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குற்றங்களுக்கான தண்டனையை முடிவு செய்யக்கூடும் என்ற சந்தேகத்தைப் பொதுமக்களிடம் எழுப்பியுள்ளது.
ஆயினும்,நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்கியே தண்டனைகள் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !