Headlines News :
Home » » ஜில்லாவில் விஜயுடன் அதிரடி அவதாரமெடுத்த காஜல் அகர்வால்.

ஜில்லாவில் விஜயுடன் அதிரடி அவதாரமெடுத்த காஜல் அகர்வால்.

Written By TamilDiscovery on Tuesday, September 10, 2013 | 3:45 AM

ஜில்லா படத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

துப்பாக்கி திரைப்படத்துக்குப் பின் விஜய் ஜோடியாக ஜில்லா திரைப்படத்தில் நடிக்கிறார் காஜல்.

இதில் அவருக்கு பொலிஸ் அதிகாரி கதாபாத்திரம்.

அண்மையில் அவர் நடித்த விறு விறு சண்டை காட்சிகள் சென்னையில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன.

பொலிஸ் சீருடையில் வில்லன்களுடன் மோதியுள்ளார்.

முதன் முதலாக சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், அக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

அதற்காக காத்திருந்தேன். வாய்ப்புகள் சரி வர அமையவில்லை.

ஜில்லா திரைப்படத்தில் கேட்ட போது, எனக்கு பொலிஸ் கதாபாத்திரம் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது.

அதற்காக பொலிஸ் உடை அணிந்து டெஸ்ட் ஷூட் எடுத்த பின் பொலிஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறினர்.

அதன் பின்னரே இந்த வேடத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் காஜல்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template