ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஹெச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் மற்றும் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆய்வு செய்தது.
அதில் ஒரு குறிப்பிட்ட வகையான சமூக வலைதலங்களை அதிகமாக பயன்படுத்தும்போது நம் மூளையில் மிகக் குறைவான தகவல்களை பதிவாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஃபேஸ்புக்:
ஃபேஸ்புக்கே கதி என்று கிடந்தால் கஜினி போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்டர்நெட் மோகம்:
இன்டர்நெட் மோகம் என்பது முதன்முதலாக சிகரெட் பிடிக்கும்போது கிடைக்கும் உணர்வு போன்று ஆகும். இன்டர்நெட்டுக்கு அடிமையாக வேண்டாம்.
ரியல் வாழ்க்கை:
உங்களின் நிஜ வாழ்க்கையை வெர்ச்சுவல் வாழ்க்கை ஓவர்டேக் செய்துவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோக்களை அப்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு நிஜ வாழ்க்கை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா.
திட்டமிடல்:
அடுத்த முறை ஆன்லைன் போகும் முன்பு என்ன தேவை என்பதை குறித்து வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
அடிமையாகிவிடாதீர்கள்:
இன்டர்நெட், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடாதீர்கள்.
நரம்பு பிரச்சனை:
இன்டர்நெட் மற்றும் ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பதால் நரம்பு பிரச்சனைகளும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிமயக்கும் இணையமும், வாழ்வை சிதைக்கும் சமூக வலைத்தளங்களும்.
(சமூகவலைத்தளங்களில் இடம்பெறும் சாதாரண தவறுகள், மோசடிகள் என்பவற்றை உங்களுக்கு கூறத் தேவையிருக்காது ஏனெனில் நீங்களே உங்களுக்கு சிறந்த அனுபவசாலிகள்)சமூக வலைத்தளங்கள் இன்று போதைக்கு நிகரனா ஒன்றாக வர்ணிக்கப் படுகின்றன. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் உங்களை கட்டுப்படுத்துகின்றன? ஆம் அல்லது இல்லை! இல்லையென பதிலளிப்பவர்கள் எத்தனை பேர்? நூற்றுக்கு எண்பது வீகிதமானவர்களின் பதில் ஆம், என்பதே!
இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாது? எண்பது சத வீகிதமானவர்களின் பதில் சாதகமானதே. சாதகமேன்பது உங்களிலேயே தங்கியுள்ளது. இணையமும், சமூக வலைத்தளங்களும் உங்களைக் கட்டுப்படுத்துகின்றனவா? இல்ல நீங்கள் கட்டுப்படுத்துகின்றீர்களா? என்பதனைப் பொறுத்தே உள்ளது.
அதவாது ஒரு நாளைக்கு நீங்கள் இணையத்துடன் எத்தனை மணிநேரம் செலவிடுகின்றீர்கள்? செலவிட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக்கொண்டீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு தைரியமான பதிலொன்று உங்களிடமிருந்து கிடைக்குமெனில் உங்களைப் பற்றி கவலையடையத்தேவயில்லை.
அனால் அதிகமானவர்கள் இணையத்தில் செலவிடும் நேரத்தில் என்ன சாதித்தீர்கள் என்றால் பதிலில்லை. அதிலும் சிலர் வெற்று வேட்டாக சமூக வலைத்தளங்களில் 24 மணித்தியாலங்களும் ஒன்லைனில் இருப்பதனையே ஒரு சாதனையாகக் கருதிநிற்க்கின்றனர். இவர்கள் படைக்கும் சாதனைகளுக்கு எவ்வாறான விருதுகளும், கௌரவிப்புகளும் கிடைக்குமென்பது தெரியவில்லை. நீங்கள் செலவிடும் நேரத்தில் எதையாவது கற்றுக்கொள்வீர்களானால், அல்லது அவ் ஆர்வம் உங்களுக்கு இருக்குமேயானால் இணையப் போதையிலிருந்து மீண்டுவிடுவீர்கள்.
இணையமென்பது தவறான கணிப்புடன் பார்க்கப் படவேண்டிய ஒன்றல்ல, மாறாக உலகத்தை விரல் நுனிக்கு தரும் ஒரு சிறப்புமிக்க தொழில்நுட்ப்ப சாதனை. அவ்வாறனதொரு பயனுள்ள சக்திமிக்க செயலாற்றலை வீணடிக்காது நொடிக்கு நொடி உங்களை வளப்படுத்திக்கொள்ள உபயோகியுங்கள்.
சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கையில் வெளி உலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே நீங்கள் இருகின்றீர்கள் என்பதே மறுக்க முடியாத மறைமுகமான உண்மை. வெளியுகல தொடர்பு துண்டிப்பென்பது, உயிரோட்டமுள்ள பல பயனுள்ள உற்சாகமான பொழுதுகளை நீங்கள் கண்மூடி கடந்து செல்கின்றீர்கள் என்பதே.
இணைய மோகத்தில் சிக்கி இன்று பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. நீங்கள் நண்பர்களுடனோ, முகவரி தெரியாதவர்களுடனோ அரட்டையில் ஈடுபட்டு பொழுதைக் களிக்கிண்றீர்க்லெனில். உங்களுக்கிடையேயான சம்பாசனையில் நீங்கள் கற்றுக்கொண்டதென்ன? அந்த சம்பாசனை உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளது? அரட்டையின் பின்னர் ஒரு நிமிடம் இதனை மீட்டுப் பாருங்கள்.
தீர்வுகளைத் தேடுங்கள். மீண்டுவர முயற்சியுங்கள். வரும் காலத்தில் இதனால் பாதிப்படைந்தவர்களுக்கென பிரத்தியோக வைதியநிலையங்கள் நிறுவப்படலாம், பிரத்தியோக ஆலோசனை நிபுணர்கள் புதிதாக முளைத்து சம்பாத்தியம் பார்க்கலாம்.
ஒரு சமூக வலைத்தலத்தினுள் நுழைவதற்கு முன் ஒரு நிமிடம் ஒதுக்கி சிந்தியுங்கள் இப்பொழுது எதற்க்காக உள் நுழைகின்றேன் உங்களுடைய தேவை என்ன என்பதனை தீர்மானியுங்கள்.
திட்டமிட்டு செயற்ப்படுங்கள். நண்பர்களுக்கான தகவல்கள் அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புங்கள், நெருங்கிய நண்பர்கள் இணைப்பிலிருந்தால் அவர்களுடைய நலன் விசாரிப்புடன் உரையாடலை நிறுத்தப் பாருங்கள். அறிமுகமில்லாத நண்பர்கள் உங்கள் பட்டியலில் இணைப்பிலிருந்தால் அவர்கள் தகவலனுப்பும் பட்சத்தில், ஒரு நிமிடம் நிதானித்து சிந்தியுங்கள் அவர் எதற்க்காக உங்களுடன் உறவை ஏற்ப்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்? அவருக்கான தேவை என்ன? அவருடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியில் நீங்கள் இருக்கின்றீர்கள்? இக்கேள்விகளுக்கு பதிலை உங்களுக்குள் தேடிக்கொண்டு பதிலளிக்க ஆரம்பியுங்கள்.
அதுவே சிறந்ததொரு அறிமுகமாகும். அத்துடன் ஆரம்பத்திலேயே அவர்களுடைய நடவடிக்கைகளைபுரிந்து கொள்வீர்களானால் நீங்கள் திறமையான புத்திசாலிகளே. அதன் பின்னர் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு தகுந்தாற்ப்போல உறவை வளர்க்கலாம்.
இங்கே எல்லோரும் தப்பானவர்கள் இல்லை, எல்லாமே தப்பான உறவில்லை. தவறாக முன்டுப்பதும் நல் வழியில் உறவை வளர்ப்பதற்கும் நீங்களே காரனமாகிணன்றீர்கள். அதன் பின்னர் மற்றவர்களை குறை கூறுவதில் எந்தப்பயனுமில்லை.
இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் என்ன எண்ணிலடங்கா விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விரும்பிய உங்ககளை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப்படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தேடலை விட ஒருமனிதனை வளமாக்க சிறந்த ஆசான் எவருமில்லை. உங்களுக்குள்ளேயே கேள்விகளை உருவாக்கிக்கொண்டு பதில்களைத் தேடுங்கள், நிச்சயமாக ஒரு கேள்விக்கு பதில் தேட ஆரம்ப்தீர்களானால் பல கேள்விகள் உங்களுக்குள் உருவாகும் பினர் பல்லாயிரக்கணக்கான பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்.
உங்களை நீங்களே சிற்பமாக செதுக்கிகொள்ளுங்கள், உங்களை செதுக்க உங்களைவிட ஒரு சிறந்த சிற்பி உங்களுக்கு வாழ்நாளில் எப்பொழுதுமே கிடைக்கப்போவதில்லை. எனவே வாழ்வில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உங்களை வளப்படுத்திக்கொண்டு வாழும் சிறிது காலத்தில் துன்பங்களைத் தூக்கிப்போட்டு மகிழ்வுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !