இன்று மொபைல் உலகில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஒரே ஜாம்பவான் ஆண்ட்ராய்டு மட்டும் தான் இதுவரை அந்த சாதனையை யாராலும் முறியடிக்கப்பெறவில்லை.
வருகின்ற நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஆறு ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஒட்டுமொத்த மொபைல் உலகையும் தன் கைக்குள் வைத்துள்ளது இது. இந்த ஆண்ட்ராய்டு எப்படி வளர்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா இதோ அதன் முழு கதையையும் இங்கு பாருங்கள்
ஆண்ட்ராய்ட் (Android 1.0):
அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில் இயங்கியது. இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் அண்மைக் காலத்திய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் தொடக்க நிலை இதுதான் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள். சிறிது கூட இன்றைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் சாயல் இதில் இருந்ததில்லை. செப்டம்பர் 2008ல் இது வெளியானது.
கப் கேக்ஸ் அவே (Cupcakes away 1.5):
நல்ல விருந்திற்குப் பின்னர் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் கலந்த பழக் கூட்டை டெசர்ட் (Dessert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்கள் எல்லாம், இவற்றின் பெயரிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கம் ""கப் கேக்ஸ் அவே'' என ஆரம்பமானது. ஏப்ரல் 2009ல் வெளியானது.
டோனட் (Donut 1.6):
திரைக் காட்சியில் கூடுதல் பிக்ஸெல் ரெசல்யூசன், மொபைல் டேட்டா பயன்பாட்டில் கூடுதல் திறன், வைபி இணைப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை இது கொண்டிருந்தது. செப்டம்பர் 2009ல் இது புழக்கத்திற்கு அறிமுகமானது.
எக்ளெர் (Eclair 12.0/2.1):
தன் ஆண்ட்ராய்ட் வரிசையின் அடுத்த சிஸ்டத்தில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டதால், இந்த பதிப்பின் எண் 2க்குச் சென்றது. டோனட் வெளியாகி, ஒரு மாதத்தில் அக்டோபர் 2009ல் இது வெளியானது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு பரவலான இடம் கிடைக்கத் தொடங்கியது.
ப்ரையோ (Fryo 2.2):
இந்த பதிப்பு மே, 2010ல் வெளியானது. இதன் பல முக்கிய அம்சங்களில், பிளாஷ் சப்போர்ட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் வைபி ஹாட் ஸ்பாட் சப்போர்ட் ஆகியவற்றைக் கூறலாம். பல செயல் இயக்கங்களின் திறன் கூடுதலாக அமைக்கப்பட்டது.
ஜிஞ்சர் ப்ரெட் (Gingerbread2.3):
டிசம்பர், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், முழுமையும் திறன் மாற்றப்பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டமாக இருந்தது. அண்மைக் கள தகவல் தொடர்பு(near field communication) இணைக்கப்பட்டது. இப்போது கூட ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பெருவாரியான சாதனங்களில், ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் தான் இயங்குகிறது.
ஹணி கோம்ப் (Honeycomb3.0):
இதனை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு என்று முழுமையாகக் கூற முடியாது. ஆனால் சிஸ்டத்தினை டேப்ளட் பிசியில் இயங்கும் வகையில் மாற்றி அளித்தது கூகுள். இதன் ஹோலோ ("Holo") யூசர் இன்டர்பேஸ் சற்று மெருகூட்டப்பட்டு கிடைத்தது. இதுதான் இன்றும் ஆண்ட்ராய்ட் பதிப்பின் அடிப்படை தொடக்கமாக இருந்து வருகிறது. இந்த பதிப்பு, 2011ல் பிப்ரவரியில் வெளியானது.
ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0):
அக்டோபர், 2011ல் வெளியான இந்த சிஸ்டம், கூகுள் டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டின் இயக்கங்களை ஒருமுகப்படுத்தியது. இன்டர்பேஸ் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டது. பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 1080p video recording, face unlock, மற்றும் Chrome browser ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஜெல்லி பீன் (Jelly Bean4.1):
சென்ற ஆண்டு வந்த ஜெல்லி பீன், கூகுள் பயனாளர்களின் பயன்பாட்டினை மட்டுமே, தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதனை நிலைநாட்டியது. Project Butter என்ற பெயரில், சிஸ்டம் செயல்பாட்டினை மந்தப்படுத்திய சில சிறிய தவறுகளைச் சரி செய்தது. குறிப்பிட்ட சில வகை தகவல்களை, வகைப்படுத்தி தேடித் தரும் "cards" என்பவை இதில் தான் அறிமுகம் செய்யப்பட்டன.
ஜெல்லி பீன் (Jelly Bean4.2.2):
இது தனது முந்தைய வெர்ஷனை விட சற்று அட்வான்ஸாக வெளிவந்து சந்தையை கலக்கி கொண்டு இருக்குறது எனலாம் அந்த அளவுக்கு இதில் அதிக ஆப்ஷன்கள் இருக்கின்றன எனலாம்.
ஜெல்லி பீன் (Jelly Bean4.3):
இதுவும் சற்று அட்வான்ஸாக வெளியிடப்பட்டது தான் ஆனால் இதன் முந்தைய பதிப்பான Jelly Bean4.2.2 அளவுக்கு வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும் நண்பரே.
ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4:
இது அடுத்த மாதம் வெளியிட இருக்கும் ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷன் நண்பரே இதில் பல அட்வான்ஸ்டு ஆப்ஷன்கள் உள்ளன என கூகுள் கூறி வருகிறது அக்டோபர் மாதம் வரை நாம் இதற்காக பொறுத்திருந்து தான் ஆக வேண்டும்.
Home »
Technology
» அப்பிளை பின்னுக்கு தள்ளிய மொபைல் ஜாம்பவான் அண்ட்ராய்டு!
அப்பிளை பின்னுக்கு தள்ளிய மொபைல் ஜாம்பவான் அண்ட்ராய்டு!
Written By TamilDiscovery on Monday, September 23, 2013 | 3:35 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !