மும்பையில் 40 வயது விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள நான்கு குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்த 40 வயது விதவைப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். மும்பையில், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார் அப்பெண்.
அப்போது, அப்பெண்ணிற்கு முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, அப்பெண் தன் இரு குழந்தைகளுடன் தினமும் இரவில் அவரது டெம்போவிலேயே உறங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல டெம்போவில் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை கவனித்த வழிப்போக்கர்கள் இருவரும், டெம்போ டிரைவரும் அவரது நண்பரும் சென்ற பின்னர், அப்பெண்ணை அருகில் உள்ள வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த மேலும் 5 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
அடுத்தடுத்து 9 பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அப்பெண் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்து, அதே அலங்கோலமான நிலையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அப்பெண்ணிற்கு மாற்று உடை கொடுத்து, தேவையான முதலுதவி செய்ய உதவிய போலீசார், அப்பெண்ணை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள தடயங்களைச் சேகரித்தனர்.
அப்பெண் கூறிய தகவல்களின் அடிப்படையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பெண் கொடுத்த தகவல்களின் பேரில் முல்லுண்டு பகுதியை சேர்ந்த அஜய் மகாவீர், மகேஷ் ராமசந்திரா, வாகித் கயூம் சேக், வசிம் சமத் சேக், தஸ்தகீர் அப்துல் கான் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர்கள் 5 பேரும் சங்கீதாவை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை வருகிற 30-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !