Headlines News :
Home » » உலகிலுள்ள விபரீதமான விசித்திர சட்டங்கள்!

உலகிலுள்ள விபரீதமான விசித்திர சட்டங்கள்!

Written By TamilDiscovery on Monday, July 22, 2013 | 8:33 AM

சமீபத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறிய ஒரு கருத்து தவறாக திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவார்கள் என்பது தான். இந்த சட்டமானது இணையதள ஊடகத்திலும், சமுதாய வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக வேகமாகவே இந்த தவறு சரி செய்யப்பட்டு, இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த வதந்தி அடங்கிவிட்டாலும், சில கிறுக்குத்தனமான சட்டங்கள் உலகத்தில் இருக்கத் தான் செய்கிறது. அப்படி உலகத்தில் இருக்கும் வேடிக்கையான சில சட்டங்கள் கீழே.

உள்ளாடை தெரியுமாறான பேண்ட் அணியக்கூடாது:
மிச்சிகன் வேடிக்கையான சட்டத்தை மிச்சிகனில் இருந்து ஆரம்பிப்போம். மிச்சிகனில் ஆண்கள் உள்ளாடை வெளியே தெரியும் வண்ணம் இருக்கும் பேண்ட்டை அணியக் கூடாது என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஹிப்-ஹாப் மற்றும் ராப் கலைஞர்கள், இவ்வகையான பேண்ட்டை அணிந்து ஃபேஷனை ஏற்படுத்தி இருந்தாலும், இது அணிவதற்கான உண்மையான காரணம் ஆரம்பித்தது சிறைச்சாலையில் தான். எப்படியெனில், பொதுவாக இவ்வகை பேண்ட்டுகளை கைதிகள், தங்களின் ஓரினச்சேர்க்கைக்குரிய தகவலை மற்ற கைதிகளுக்கு வெளிப்படுத்தவே பயன்படுத்தினர். என்ன இன்னும் உங்கள் உள்ளாடையை வெளிக்காட்ட ஆசை உள்ளதா? இல்லை என்று தான் நாங்கள் நம்புகிறோம்.

நோயை வெளிக்காட்டக் கூடாது:
வாஷிங்டன் கடுமையான சளி மற்றும் ஓயாத தும்மலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இதனோடு வெளியே வந்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் அல்லது சிறையில் கூட அடைக்கப்பட்டு விடலாம். எங்கே என்று கேட்கிறீர்களா? வேறெங்கும் இல்லை வாஷிங்டனில் தான்! சுருக்கமாக சொன்னால், வாஷிங்டன் அதன் மக்களை அவர்களின் நோயை வெளிக்காட்ட அனுமதிக்கமாட்டார்கள்.

குண்டாக இருப்பது சட்ட விரோதம்:
ஜப்பான் ஜப்பான் அதன் மக்களை கட்டமைப்புடன் வைத்திருக்க சில முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாக மிகவும் கடுமையான சட்டத்தை பிறப்பித்துள்ளது. எவ்வளவு கடுமை என்று கேட்கிறீர்களா? 40 வயதை தாண்டிய ஆணும் பெண்ணும், தங்களின் இடுப்பளவு 32" மற்றும் 36" மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், பழமை வாய்ந்த 'சுமோ மறப்போர்' நடப்பது ஜப்பானில் தான்.

கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தி வீசக்கூடாது:
கன்சாஸ் யார் மீதாவது கத்தி வீசுவது என்பது கன்சாசில் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தி வீசுவது பெரிய குற்றமாகும். இந்த வேடிக்கையான சட்டம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. யாரோ வேலை வெட்டி இல்லாதவர்கள், பொழுது போகாமல் கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தியை வீசியுள்ளார்கள்.

அயல்நாட்டு மீன்களை விற்கும் பெண்கள் மட்டும் மேலாடை அணியாமல் நிர்வாணமாக இருக்கலாம்:
லிவர்பூல் இதோ இந்த பட்டியலில் மற்றொரு விந்தையான சட்டம். லிவர்பூலில் உள்ள பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து, தங்களின் உடலை நிர்வாணமாக ஊருக்கு வெளிக்காட்ட விரும்பினால், அது சட்ட விரோதமே. ஆனால் இது சட்டத்திற்கு உட்பட ஒரு விதிவிலக்கு மட்டும் உள்ளது. அது என்னவென்றால், அயல்நாட்டு மீன்களை சந்தையில் விற்கும் பெண்கள் மட்டும், இதற்கு விதிவிலக்கு உண்டு. விற்பனையை அதிகரிக்க இவ்வகை தந்திரங்களை பயன்படுத்துவது, லிவர்பூலின் வாடிக்கையாகும்.

போலியான கோகோயின் வைத்திருப்பது சட்ட விரோதம்:
அரிசோனா வாடிக்கையாளர்களின் மன நிறைவின்மையை போக்குவது என்பது மிகவும் முக்கியம். அதிலும் அரிசோனா ஒருபடி மேலே போயுள்ளது. போதை பொருட்கள் விற்பது சட்ட விரோதமே. ஆனால் போலியான போதை பொருட்களை விற்பது மிக பெரிய சட்ட விரோதமாகும். ஏனென்றால் கோகோயின் என்று நினைத்து, வெறும் பவுடரை வாங்கி ஏமாந்து விட்டேன் என்று போதைக்கு அடிமையானவன் புகார் கூறுவது பெரிய கொடுமையாக அல்லவா இருக்கும்.

வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை:
டென்மார்க் டென்மார்க் என்பது வசீகரிக்கும் ஒரு அழகிய நாடாகும். ஆனால் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, அவர்களின் வசீகரத்தை மேன்மேலும் அதிகரிக்கும். அவர்களை பொருத்தவரை, உணவருந்தும் ஒருவர் தன் வயிறு நிறையும் அளவிற்கு உண்டால் மட்டுமே காசு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், அவர் பணம் செலுத்தாமல் போய் விடலாம்.

வாஷிங்டனில் ஒரு குற்றவாளி குற்றம் புரிய நுழையும் முன் காவல் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும்:
வாஷிங்டன் அங்குள்ள குற்றவாளிகள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏதாவது குற்றம் புரியும் எண்ணத்தோடு அங்கு நுழைய முற்பட்டால், அதற்கு முன் வாஷிங்டன் காவல் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். வங்கியை கொள்ளை அடித்த பின், காவல் தலைமையிடம் சேர்ந்து ஒரு காப் காபி குடித்து இளைப்பாறினால் எப்படி இருக்கும்?

மன்னனின் தனிச்சிறப்புரிமை 1324- கிரேட் பிரிட்டன்:
கிரேட் பிரிட்டனில், எந்த ஒரு அயல்நாட்டு மீன் கடற்கரையில் கரை ஒதுங்கினாலும், அது அரச குடும்பத்திற்கு தான் போய் சேரும் என்று மன்னனின் தனிச்சிறப்புரிமை 1324 கூறுகிறது. அதாவது கடற்கரையோரம் ஒரு திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியிருந்தால், அதனை யாரும் தங்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. அதனை அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதனை அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விடுவார்கள். அப்படி அழுகிய ஒரு திமிங்கலத்தை, எலிசபெத் மகாராணியின் அரச அறையில் வைத்திருப்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

சுய இன்பம் காண்பவர்கள் குற்றவாளிகள்:
இந்தோனேஷியா நீங்கள் இந்தோனேஷியாவில் இருக்கும் போது சுய இன்பம் காண தோன்றினால், முதலில் அந்த எண்ணத்தை கைவிடுங்கள். அங்குள்ள சட்டத்தின் படி, சுய இன்பம் காண்பது குற்றமாகும். நல்ல வேளை, உங்கள் குளியலறையில் நீங்கள் செய்வதை படம் பிடித்து காட்ட, இன்னும் எந்த ஒரு தொழில் நுட்பமும் வரவில்லை. உலகத்தில் உள்ள மிக வேடிக்கையான சட்டத்தில் இதுவும் ஒன்று.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template