மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மனைவியின் செயல்பாடுகளால் அவதியுற்றதால் குடும்ப நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து அளித்துள்ளது.
கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்ட மருத்துவத் தம்பதியினர் மும்பையில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அந்தக் கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
விவாகரத்திற்கு காரணமாக அந்த நபர் தெரிவித்திருந்ததாவது, திருமணத்தின்போது தான் மும்பையிலும், தனது மனைவி கர்நாடக மாநிலத்திலும் படித்துக் கொண்டிருந்ததாகவும், தான் ஆண்கள் விடுதி ஒன்றில் அப்போது தங்கியிருந்ததாகவும் கூறியிருந்தார்.
ஆயினும், மும்பை வரும்போது எல்லாம் தன்னுடன் தங்க வேண்டும் என்று மனைவி வலியுறுத்தியதால் தான் இடம் மாறநேரிட்டது என்றும், அது தன்னுடைய முதுநிலைப் படிப்பையே ஒரு வருடம் தடை செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியின் சந்தேகத்தினால் தான் தன்னுடைய மருத்துவமனையையே மூட நேரிட்டது என்று அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உணவு, தண்ணீர் முதலிய அடிப்படைத் தேவைகளைக் கூட தனக்கு அளிக்க மறுத்து தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியைக் கூட பூட்டி வைத்துக் கொள்ளுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தன்னுடைய வயது முதிர்ந்த தோற்றம் கூட பிரச்சினைகளை வளர்த்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளிலும் அவரது மனைவி நீதிமன்றத்திற்கு வராததால், கணவரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட குடும்பநல நீதிமன்றம் அவருக்கு விவகாரத்து வழங்கியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !