ஜப்பானில் புகுஷிமா பேரழிவை கிண்டல் செய்யும் விதமாக பிரான்ஸ் கார்ட்டூனை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியும், நிலநடுக்கமும் ஜப்பானையே புரட்டிப் போட்டது. குறிப்பாக புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு வெடித்து சிதறியது.
இந்நிலையில் இந்த பேரழிவினை கிண்டல் செய்யும் விதமாக பிரான்சில் கார்ட்டூன் சித்திரம் வெளியாகியுள்ளது. அதாவது, புகுஷிமா பேரழிவினை டோக்கியோ 2020 ஒலிம்பிக்குடன் ஒப்பிட்டு கார்ட்டூன் ஒன்றினை வரைந்துள்ளனர்.
முதல் படத்தில், ஜப்பானில் அணு நெருக்கடி இருக்கும்போது ஒலிம்பிக் நடத்தப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்று வரையப்பட்டுள்ளது. அடுத்த படத்தில், இரண்டு நபர்கள் ஒரு குளத்தின் முன்னாள் அமர்ந்துகொண்டு ஜப்பானில் அணுப்பிளவினால் ஏற்பட்ட ஆபத்தால் தண்ணீரின் நிலைமை குறித்து கலந்துரையாடுவதாக வரையப்பட்டுள்ளது.
இந்த கார்ட்டூனானது ஜப்பான் மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தலைமை அமைச்சரவை செயலாளர் யோசிஹைட் சுகா கூறுகையில், இந்த கார்ட்டூனானது ஜப்பானை பற்றிய தவறான கருத்தை வரவழைக்கின்றது. மேலும் அரசாங்கமானது புகுஷிமா பேரழிவினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. அதனால் ஒலிம்பிக் பாதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்சில் வெளியுறவு துறை அமைச்சர், லாரண்ட் பேபியஸ் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !