Headlines News :
Home » » சுருங்கி விரியக் கூடிய நவீன 'அர்மடில்லோ-T' கார்!

சுருங்கி விரியக் கூடிய நவீன 'அர்மடில்லோ-T' கார்!

Written By TamilDiscovery on Wednesday, September 11, 2013 | 10:02 PM

பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பாதியாக சுருங்கிக் கொள்ளும் புதிய எலக்ட்ரிக் காரை தென்கொரியாவை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்துடன் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் கார்.

ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு:
அர்மடில்லோ டி (armadillo-T)  என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் காரை மடக்கி விரிப்பதற்கு ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது.

தானியங்கி பார்க்கிங்:
பாதியாக சுருங்கிக் கொள்ளும் என்பதோடு, முன்சக்கரங்களுடன் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய சக்கரங்களின் உதவியுடன் 360 டிகிரி கோணத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தில் பார்க்கிங் செய்து கொள்ளும்.

மோட்டார்:
நான்கு சக்கரங்களிலும் தனித்தனி மோட்டார்கள் உதவியுடன் இயங்குகிறது. 13.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

2 சீட்டர்:
இந்த கார் 2 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது. 450 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

நோ ரியர் வியூ மிரர்:
பின்புறம் பார்ப்பதற்கு ஏதுவாக ரியர் வியூ மிரர்களுக்கு பதிலாக கேமரா மூலம் டேஷ்போர்டில் இருக்கும் திரையில் பின்னால் வரும் வாகனங்களை பார்த்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. காரில் பொருத்தப்பட்டிருக்கும் விண்டோஸ் செயலியில் இயங்கும் சிறிய கம்ப்யூட்டர் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு இயக்கலாம்.

ரேஞ்ச்:
குயிக் சார்ஜ் ஆப்ஷன் மூலம் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும், மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும்.

மடங்கும் அளவு:
இந்த கார் 2.8 மீட்டர் நீளம் கொண்டது. ஆனால், பார்க்கிங் செய்யும்போது வெறும் 1.65 மீட்டர் நீளமுடையதாக குறைந்துவிடும்.

வசதி:
நெருக்கடியான சாலைகள், ஷாப்பிங் மால்கள், அடுக்குமாடி குடியிருப்பகளில் நிலவும் இடப் பிரச்னைக்கு இந்த கார் சிறந்த தீர்வாக இருக்கும் என்று இந்த கார் திட்டத்துக்கு தலைமை வகித்த பேராசிரியர் சூ என் சூ தெரிவித்துள்ளார்.

அனுமதி இல்லை:
சாலையில் இயக்குவதற்கு ஏற்ற அம்சங்கள் இல்லை என்பதால் இந்த கார்தற்போது அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தென் கொரிய அரசு இந்த காருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் என உருவாக்கிய மாணவர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template