Headlines News :
Home » » கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு.

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு.

Written By TamilDiscovery on Monday, September 16, 2013 | 9:31 PM

புத்தரின் வாழ்க்கையில் பல திருப்பு முனைகள் அமைந்துள்ளது. அவ்வாறு அமைந்த திருப்பு முனைகள் மனித குலத்து வாழ்க்கைக்கு எவ்வள பயனுள்ளது என்பது புத்தரின் வாழ்க்கை வறலாற்றிளிருந்து புரிந்து கொள்ளலாம்.

செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தர், நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி  எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதத்துப் பூரணை தினத்தில் அரசன் சுத்தாதனனுக்கும் அரசி மாயாவதிக்கும் கெகௗதமன் மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர்.

அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.

தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.

அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும்  உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.

உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார்.

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழேவண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மைனையவிட்டு சித்தார்த்தன் வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகைள முழுமூச்சுடன் கற்று, தேடிப் பார்த்தான். தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவு, உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து, உட‌லை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசைலத் தொட்டேபாதுதான், தன் தேடலுக்கான விடை, தியானத்திலும் இல்லை எனக் கண்டுகொண்டான்.

தன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணைவ அனுபவித்துச் சாப்பிட்டேபாது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்ததுபோல் இருந்தது

மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி (அத்தி) மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் ஆழ்ந்த தியானத்தில் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது ‘எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்’) என்று அறிவித்துக் கொண்டார்.

முதலாவது உண்மை:
மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.

இரண்டாவது உண்மை:
அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.

மூன்றாவது உண்மை:
மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.

நான்காவது உண்மை:
மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.

*நேர்மையான கருத்து.
*நேர்மையான எண்ணம்.
*நேர்மையான பேச்சு.
*நேர்மையான செயல்.
*நேர்மையான வாழ்க்கை.
*நேர்மையான முயற்சி.
*நேர்மையான சித்தம்.
*நேர்மையான தியானம், ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.

அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள்.

புத்தர் தனது முதல் போதனையை 35-ஆவது வயதில் தன்னுடைய ஐந்தே ஐந்து சீடர்களுக்கு மட்டும் தான் கண்டுணர்ந்த உண்மைகளை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் எனும், சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார்.

அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.

ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். "நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது, நாளை நடப்பைதத் தடுக்க முடியாது. இன்றய பொழுதில், இக்கணத்தில் வாழுங்கள்! அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு!" என்றார் புத்த பெருமான்.

கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அரிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகரில் இரும்புக் கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த காளான் உணவைச் சாப்பிட்டதும், அதை உடம்பு ஏற்கவில்லை என்பைதயும், உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பைதயும் உணர்ந்துகொண்ட புத்தர், தம் பிரதம சீடர் ஆனந்தைனைஅழைத்து, மரத்தின் கீழே படுக்கை விரிக்கச் சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து, ‘‘ஆனந்தா, இப்போது நான் மரண கணத்தில் வாழப்போகிறேன்’’என்று புன்னைகேயாடு சொல்லிவிட்டு, அமைதியாக உயிர் துறந்தார்.

புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்து, புது வழி காட்டும் அவரது
‘இக்கணத்தில் வாழு’ என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின்
ஒளிவிளக்காக மனிதர்களுக்குக் காலெமல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template