பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அனிதா குப்புசாமி அடிப்படையில் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பால்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர்.
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார்.
முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்தார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் இன்று அதிமுகவில் இணைந்தார். இவர் முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில்தான் இருந்தார். பின்னர் திமுகவுக்குப் போனார். தற்போது மீண்டும் அதிமுகவுக்கே திரும்பியுள்ளார்.
பிரபல செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன் தனது மனைவி, மகனுடன் குடும்பமாக அதிமுகவில் ஐக்கியமானார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !