அதிவேகமாக கயிற்றின் மேல் நடக்கும் ஒரு நாயும், சூப்பராக ஸ்கேடிங் செய்யும் ஒரு ஆடும் கின்னஸ் சாதனை படைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள மக்கள் பலவகையான வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இந்த கின்னஸ் சாதனை பட்டியலில் விலங்குகளும் பலவகையான வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தி சாதனை புரிந்து அதன் உரிமையாளர்களுக்கு பெருமை சேர்ப்பது அனைவரும் அறிந்ததே.
அவ்வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நபர் வளர்த்துவரும் நாய் ஒன்று வேகமாக கயிற்றில் நடந்து சாதனை படைத்தது.
இந்த நாயின் பெயர் ஒஸி. 4 வயதான இந்த நாயின் உரிமையாளர் நோர்விச் நகரை சேர்ந்த நிக்ஜான் சன்.
இந்த நாய் 18.22 வினாடிகளில் 3.5மீ நீள கயிற்றை கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நாய்க்கு அதன் உரிமையாளர் கயிற்றில் நடக்க எந்த விதமான பயிற்சியும் அளிக்கவில்லையாம்.
இதேபோல் ப்ளிலாரிடாவை சேர்ந்த மெலடி கூக் என்பவற்றின் ஆடு ஹாப்பி, 25 வினாடிகளில் 36 மீ ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !