Headlines News :
Home » » தலைவா: ஒரு விஜய் ரசிகனின் கவலை: பயமாக இருக்கிறது!

தலைவா: ஒரு விஜய் ரசிகனின் கவலை: பயமாக இருக்கிறது!

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 12:07 AM

தலைவா படம் குறித்து தீவிர விஜய் ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். இளையதளபதியின் தலைவா படம் வரும் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு தான் மட்டும் போகாமல் தனது சொந்த செலவில் தனது நண்பர்களையும் அழைத்துச் செல்பவர் அந்த ரசிகர். அவர் தலைவா குறித்து நம்மிடம் கூறுகையில், விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு கூட இந்த அளவுக்கு பில்ட்அப் கொடுக்கவில்லை. ஆனால் தலைவா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சில் விளம்பரம் செய்கின்றனர்.

எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்தால் கூட அது எங்கள் விஜய்க்கு வெற்றிகரமானதாக அமையும். ஆனால் தற்போது ஓவர் பில்ட்அப் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அது தான் பயமாக இருக்கிறது என்றார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template