6 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் 20 சந்தேகநபர்கள் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர்களிடம் இருந்து 45 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் நீண்ட காலமாக பதுளை பகுதிக்கு ஹெரோயின் விநியோகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சந்தேகநபர்கள் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
பதுளை பொலிஸார் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !