
படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சில இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் விஷ்ணுகுமார் என்ற ரசிகர் ஒருவர் ‘தலைவா’ படம் வெளியாகாத ஏமாற்றத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
நான் நடித்த ‘தலைவா’ திரைப்படம் இந்த வாரம் 9.08.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.
என் மீது பாசமும், அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏமாற்றத்தினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன். இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் ‘தலைவா’ திரைப்படம் வெளியாகும். அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தலைவா விமர்சனம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !