
முதலில் 'நளனும் நந்தினியும்' என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். தற்போது 'சுட்ட கதை' படத்தை தயாரித்து வருகிறார். இதுதவிர 'ஒண் பிளஸ் ஒண் த்ரீ' என்ற படத்தையும் 'கொலை நோக்கு பார்வை' என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
பாலாஜி, வெங்கி, லட்சுமி ரியா நடிக்கும் சுட்டகதை அடுத்த மாதம் வெளிவருகிறது. சுபு இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் வருமானத்தைக் கொண்டு இருதயம் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்ள தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். சென்னை சவீதா பொறியியல் கல்லூரியும், பாரதிராஜா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இருதய பாதிப்பு குழந்தைகளின் மருத்துவ பரிசோதனை முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழந்தைகள் இந்த பலனை பெற இருக்கிறார்கள்.
உயிருக்கு போராடும் இந்த குழந்தைகளுக்காகவாவது படம் ஓட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !