
நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற மேற்படி கொடூரம் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து சந்தேக நபரான தந்தை கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நாளை திங்கட்கிழமை (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் இருந்த தந்தை தனது மகனின் முகத்திலும் உடலின் பல இடங்களிலும் சூடுவைத்துள்ளதாகவும் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் மனைவி பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சூட்டுக்காயங்களுக்குள்ளான சிறுவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !