திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தின் மகளை காதலித்து மணந்த தனது மகனை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையைத் சேர்ந்த ஒரு பெண். சென்னை வடபழனியில் வசித்து வரும் ராஜகுமாரி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:-
திருத்தணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் மகளை காதலித்து திருமணம் செய்த எனது மகன் ரமேசுக்கு, அருண் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எனது மகன் ரமேசை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் ரமேசின் தாயார் ராஜகுமாரி கூறியுள்ளார்.
அருண் சுப்பிரமணியனின் மகள் நித்யா. இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த வாலிபர் ரமேசை கடந்த சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது ரமேஷ் தனது தாயாருடன் வடபழனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நித்யா தனது குழந்தையுடன், திருத்தணியில் உள்ள தனது தந்தை அருண் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தனது கணவர் வீட்டுக்கு அவர் திரும்பவில்லையாம்.
தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி திருத்தணியில் உள்ள அருண் சுப்பிரமணியன் வீட்டுக்கு ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால் நித்யாவை கணவருடன் அனுப்பி வைக்காமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் ரமேஷை மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ரமேஷின் தாயார் ராஜகுமாரி கடந்த 4-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அருண்சுப்ரமணியன் எம்.எல்.ஏ. வீட்டில் இருந்தவர்கள் தன் மகனை மிரட்டுவதாகவும், எனவே ரமேசுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ரமேஷ் காணமல் போகவே கண்டுபிடித்து தருமாறு வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.விடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே அருண் சுப்ரமணியத்தின் மீது நிலமோசடி வழக்கு உள்ளது.
இந்த நிலையில் புதிதாக மகளின் காதல் கணவர் மாயமான வழக்கும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !